Sunday, June 7, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்மார்ஷல் படத்தில் வில்லன் யார்...

மார்ஷல் படத்தில் வில்லன் யார்…

நடிகர் கார்த்தி நடிப்பில் வா வாத்தியார், சர்தார் 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றன. அடுத்து டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்தில் அவரது 29வது படமாக ‘மார்ஷல்’ படத்தில் நடித்து வருகிறார். ட்ரீம் வாரீயர் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர். சாய் அபயன்கர் இசையமைக்கிறார். 1960களில் ராமேஸ்வரம் பின்னணியில் கடல் கொள்ளையர் கதை களத்தில் உருவாகிறது.

இதில் கதாநாயகியாக மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சத்யராஜ், பிரபு, லால், ஈஸ்வரி ராவ், ஜான் கொக்கென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் நிவின் பாலி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் நிவின் பாலி நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளாராம். இதையடுத்து இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இப்போது நடிகர் ஜீவா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என தகவல் தெரிவிக்கின்றனர்.

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments