மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியின் நெடுஞ்சாலையில் நேற்று பரபரப்பான விபத்து ஒன்று ஏற்பட்டது.
கியாஸ் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் நடுரோட்டில் கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இந்த வெடிப்பில் சாலையில் சென்று கொண்டிருந்த 18 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. அந்த இடம் போர்க்களம் போல் மாறிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த கோர விபத்தில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்ததோடு, 90-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.
விபத்துக்குப் பிறகு, அந்த நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.


