Tuesday, October 6, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் ‘96’!

8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் ‘96’!

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘96’ திரைப்படம், வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சி. பிரேம்குமார் இயக்கத்தில், கோவிந்த் வசந்த் இசையமைப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம், காதல் மற்றும் பள்ளிப் பருவ நினைவுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

ராமச்சந்திரன் மற்றும் ஜானகிதேவி ஆகியோரின் காதல், எதிர்பாராத சூழ்நிலைகளால் பிரிவதும், 22 ஆண்டுகளுக்குப் பின்னர் பள்ளி நண்பர்கள் சந்திப்பின் மூலம் இருவரும் மீண்டும் சந்திப்பதும் கதையின் முக்கிய அம்சமாக அமைந்தது.

இந்நிலையில், திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதி ‘96’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்கள் மற்றும் கதைக்களத்துடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் ‘96’ திரைப்படம் தொடர்பான அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments