Saturday, November 14, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்76 வயது மூதாட்டிக்கு கொடூரம் – இரு இளைஞர்கள் கைது!

76 வயது மூதாட்டிக்கு கொடூரம் – இரு இளைஞர்கள் கைது!

இந்தியாவில் 76 வயதுடைய மூதாட்டி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 20 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த மூதாட்டியிடம் உதவி செய்வது போல் பேசிய இரு இளைஞர்களும், அவரை வீட்டில் கொண்டு சேர்ப்பதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.

எனினும், ஆள் நடமாட்டமற்ற பாழடைந்த வீடொன்றிற்கு அவரை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மூதாட்டி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஐந்து பிள்ளைகளும் ஏழு பேரப்பிள்ளைகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், தப்பிச் சென்றதாகக் கூறப்படும் இரு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments