உலக அளவில் மைக்ரோசொவ்ட் நிறுவனத்தின் அவுட்லுக், டீம்ஸ் உள்ளிட்ட சேவைகள் முடங்கி உள்ளன. இதன் காரணமாக பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மென்பொருள் சேவை நிறுவனங்களில் உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் நிறுவனங்களில் ஒன்று மைக்ரோசொவ்ட் . அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த நிறுவனத்தின் முக்கிய சேவைகள் முடங்கி உள்ளன.
இணையதள சேவைகள் பாதிப்பு குறித்த தகவலை அறிய உதவும் டவுன் டிடெக்டர் தளத்தில் மைக்ரோசொவ்ட் சேவை முடக்கம் குறித்து பயனர்கள் தெரிவித்துள்ளனர். அதில் மின்னஞ்சல் சேவை வழங்கும் மைக்ரோசொவ்ட் நிறுவனத்தின் அவுட்லுக், மைக்ரோசொவ்ட் 365, டீம்ஸ், மைக்ரோசொவ்ட் ஸ்டோர், ஏஐ சேவைகளை வழங்கும் கோபைலட் உள்ளிட்ட சேவைகளை இலங்கை நேரப்படி இன்று அதிகாலை முதல் பயனர்களால் பயன்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.


