Saturday, November 14, 2026
spot_img
Homeகனடா செய்திகள்சீனாவுக்கான கனேடியத் தூதுவர் தேர்வு!

சீனாவுக்கான கனேடியத் தூதுவர் தேர்வு!

சீனாவுக்கான புதிய கனேடியத் தூதுவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார்.

கடந்த வசந்த காலத்தில் இருந்து வெறுமையாகவுள்ள இப்பதவிக்குச் சரியான நபரொருவரைத் தேர்வு செய்யும் பணிகள் இடம்பெற்று வந்ததாகவும், தற்போது அதற்கான தகுதியான நபர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மொன்றியலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மார்க் கார்னி குறிப்பிட்டுள்ளார்.

தூதுவர் பதவிக்கான நபர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இராஜதந்திர முறைப்படி சீனாவின் ஒப்புதலைப் பெறும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இது நிறைவடைந்தவுடன் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் பிரதமர் கார்னி கூறினார்.

இதேவேளை, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீனா செல்லும் பிரதமர் மார்க் கார்னி, அங்கு சீன அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்தித்து உரையாடவுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது கனடாவில் வெளிநாட்டுத் தலையீடுகள் குறித்த கவலைகளைத் தாம் நேரடியாக முன்வைக்கப் போவதாக அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவுகள் ஆழமடைந்து வந்தாலும், பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தெளிவான எல்லைக் கோடுகளும் கட்டுப்பாடுகளும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கார்னி குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments