Saturday, November 14, 2026
spot_img
Homeகனடா செய்திகள்அமெரிக்காவை மீண்டும் நாடும் கனேடியர்கள்!

அமெரிக்காவை மீண்டும் நாடும் கனேடியர்கள்!

அமெரிக்காவுக்கான கனேடியர்களின் பயணம் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கனடாவின் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவுக்கு எதிராக வர்த்தகப் போரை ஆரம்பித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்குச் செல்லும் கனேடியர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருந்தது.

கடந்த 2025ஆம் ஆண்டு, 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குத் திரும்பிய பயணங்களின் எண்ணிக்கை 25.4 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தது.

எனினும், இந்தப் போக்கில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம், கனேடியர்கள் கார் மற்றும் விமானம் மூலம் சுமார் 1.9 மில்லியன் பயணங்களை அமெரிக்காவுக்கு மேற்கொண்டுள்ளனர். இது 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 3 சதவீத அதிகரிப்பாகும்.

இதில், தரைவழிப் பயணங்கள் 2.2 சதவீதத்தாலும், விமானப் பயணங்கள் 5.6 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளன.

அமெரிக்காவுக்கான கனேடியர்களின் பயணம் தொடர்ந்து ஏழாவது மாதமாக அதிகரித்துள்ள போதிலும், 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தரைவழிப் பயணங்கள் இன்னும் 29 சதவீதமும், விமானப் பயணங்கள் 19 சதவீதமும் குறைவாகவே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவை மீண்டும் நாடும் கனேடியர்கள்!

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments