Wednesday, September 23, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழா குஜராத்தில் கோலாகலம்

72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழா குஜராத்தில் கோலாகலம்

இந்திய திரைத்துறையின் முக்கிய விருதுகளில் ஒன்றான 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று (22) குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெற்றது.

முதன்முறையாக டெல்லிக்கு வெளியே நடைபெற்ற இந்த விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.

2024ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், சிறந்த நடிகருக்கான விருதை ‘பிரம்மயுகம்’ திரைப்படத்திற்காக மம்முட்டியும், ‘சந்து சாம்பியன்’ திரைப்படத்திற்காக கார்த்திக் ஆர்யனும் பகிர்ந்து பெற்றனர்.

‘அமரன்’ திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருதை ராஜ்குமார் பெரியசாமி பெற்றதுடன், சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜி.வி. பிரகாஷ் குமாருக்கும் வழங்கப்பட்டது.

தமிழில் சிறந்த திரைப்படமாக ‘ராயன்’ தெரிவு செய்யப்பட்டதுடன், ‘மகாராஜா’ திரைப்படத்திற்காக சிறந்த சண்டை இயக்கத்துக்கான விருதை அனல் அரசு பெற்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments