இலங்கையில் முத்துராஜவெலயிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) வரை விமான எரிபொருளை சேமித்து விநியோகிக்கும் புதிய கட்டமைப்பை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை சீனா பெட்ரோலியம் பைப்லைன் இன்ஜினியரிங் கம்பனி லிமிடெட்(China Petroleum Pipeline Engineering Company Limited) நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
திட்டத்தின் கீழ் முத்துராஜவெலயில் 92,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட விமான எரிபொருள் சேமிப்பு தொட்டி வளாகம் அமைக்கப்படவுள்ளது. அங்கிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் எரிபொருள் நிரப்பும் முனையத்துடன் இணைக்கும் வகையில் தனியான எரிபொருள் குழாய்த் தடமும் அமைக்கப்படவுள்ளது. தற்போதுள்ள முனையத்திலும் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.
சர்வதேச போட்டி அடிப்படையிலான கொள்வனவு நடைமுறையில் மூன்று நிறுவனங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பித்திருந்த நிலையில், உயர்மட்ட கொள்வனவுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் பெறுமதி 40.84 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 8,548.75 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு அமைச்சரவை முதன்முதலில் 2024 ஜூலை 29ஆம் திகதி அனுமதி வழங்கியிருந்தது


