Thursday, September 17, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்50 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் தோல்வியடைந்த மான்செஸ்டர் யுனைடெட்

50 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் தோல்வியடைந்த மான்செஸ்டர் யுனைடெட்

இங்கிலாந்தின் பிரபல கால்பந்து அணியான மான்செஸ்டர் யுனைடெட், தனது சொந்த மைதானமான ஓல்ட் டிராஃபோர்டில் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிர்ச்சிகரமான தோல்வியை சந்தித்துள்ளது.

இங்கிலாந்து பிரீமியர் லீக்கில் 13 முறை கிண்ணத்தை வென்றுள்ள மான்செஸ்டர் யுனைடெட், சமீப காலங்களில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை. இந்நிலையில், கராபாவ் கோப்பை போட்டியில் பிரைட்டன் அணியை ஓல்ட் டிராஃபோர்டில் எதிர்கொண்டது.

போட்டியின் ஆரம்பத்திலேயே மான்செஸ்டர் யுனைடெட் ஆதிக்கம் செலுத்தியது. 8 மற்றும் 10ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்களை அடித்து 2-0 என முன்னிலை பெற்றது. எனினும், முதல் பாதியின் மேலதிக நேரமான 45+1ஆவது நிமிடத்தில் பிரைட்டன் ஒரு கோலைப் பெற்று இடைவேளையில் கோல் வித்தியாசத்தை 2-1 எனக் குறைத்தது.

இரண்டாம் பாதியில் பிரைட்டன் சிறப்பாக விளையாடியது. 65 மற்றும் 70ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்களை அடித்த அந்த அணி, 3-2 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தியது. பிரைட்டன் மொத்தமாக 15 முறை கோல் முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், அவற்றில் 5 முயற்சிகள் இலக்கை நோக்கி அமைந்திருந்தன.

மான்செஸ்டர் யுனைடெட் அணி 2-0 என முன்னிலை பெற்ற பின்னர் போட்டியில் தோல்வியடைந்தது, ஓல்ட் டிராஃபோர்டில் கடந்த 50 ஆண்டுகளில் அந்த அணிக்கு ஏற்பட்ட முதல் சம்பவமாக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் சொந்த மண்ணில் 2-0 முன்னிலை பெற்ற நிலையில் தோல்வியை சந்திக்காத நீண்ட வரலாற்றை அந்த அணி கொண்டிருந்தது.

ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெற்ற 145 போட்டிகளில் மான்செஸ்டர் யுனைடெட் 143 வெற்றிகளைப் பதிவு செய்திருந்த நிலையில், ஒரு போட்டியை சமநிலையில் முடித்திருந்தது. தற்போது பிரைட்டனிடம் பெற்ற தோல்வி அந்த வரிசையில் மற்றொரு அதிர்ச்சிகரமான பதிவாக அமைந்துள்ளது.

இந்த தோல்வியைத் தொடர்ந்து மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அணியின் செயல்பாடு தொடர்பில் ரசிகர்கள் கோபத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்திய நிலையில், பிரைட்டனிடம் ஏற்பட்ட இந்த தோல்வியால் மான்செஸ்டர் யுனைடெட் கராபாவ் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments