Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற 5 பேர் பலி

தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற 5 பேர் பலி

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

10 பேர் கொண்ட குழுவொன்று கிரிபத்கொடையில் இருந்து சிலாபத்திற்கு இன்று (5) சுற்றுலா சென்றுள்ளனர்.

அவர்கள் சிலாபத்தில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்றிருந்த நிலையில், அவர்களில் 5 பேர் காணாமல் போயிருந்தனர்.

காணாமல் போனவர்களில் ஒருவர் மட்டுமே பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் அவர் தற்போது சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து காணாமல் போன ஏனையவர்களை தேடும் நடவடிகையில் பொலிஸார், பொலிஸ் உயிர் காப்பு பிரிவினர், கடற்படையினர் மற்றும் பிரதேச மக்களும் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments