Sunday, November 15, 2026
spot_img
Homeகனடா செய்திகள்5 மாதங்களாகியும் மர்மம் நீடிப்பு – தீப்பற்றி எரிந்த ஹூண்டாய் கோனா கார்!

5 மாதங்களாகியும் மர்மம் நீடிப்பு – தீப்பற்றி எரிந்த ஹூண்டாய் கோனா கார்!

ஒன்ராறியோவில் பிராண்ட்ஃபோர்டில், வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த ஹூண்டாய் கோனா என் (Hyundai Kona N) கார் திடீரெனத் தீப்பற்றி எரிந்த சம்பவம் தொடர்பாக ஐந்து மாதங்களாகியும் காரணம் கண்டறியப்படவில்லை.

இரண்டு குழந்தைகளின் தந்தையான இர்பான் வால்ஜி என்பவருக்குச் சொந்தமான 2023ஆம் ஆண்டு ஹூண்டாய் கோனா என் கார், கடந்த ஜூன் 15ஆம் திகதி நள்ளிரவில் தீப்பற்றி எரிந்துள்ளது.

அண்டை வீட்டாரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து குடும்பத்தினர் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். எனினும், தீ அருகிலிருந்த மற்றொரு காருக்கும் கேரேஜுக்கும் பரவியுள்ளது.

இந்தச் சம்பவத்தால் குடும்பத்தினர் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக வால்ஜி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக டிரான்ஸ்போர்ட் கனடா விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது. வாகனத் தீ விபத்துகளுக்கான காரணத்தைக் கண்டறிவது கடினமானது என்றும், இயந்திரக் கோளாறு, மின்சாரப் பிரச்சினை அல்லது பராமரிப்புக் குறைபாடு உள்ளிட்ட பல காரணங்களால் தீ ஏற்படலாம் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில், சம்பவம் தொடர்பாகத் தங்களுக்குப் போதிய தகவல்கள் கிடைக்கவில்லை என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.

டிரான்ஸ்போர்ட் கனடா வெளியிட்ட தரவுகளின்படி, 2016ஆம் ஆண்டு முதல் 2026 நவம்பர் 3ஆம் திகதி வரை கனடாவில் மொத்தம் 1,150 வாகனத் தீ விபத்துகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 169 சம்பவங்கள் ஹூண்டாய் வாகனங்களுடன் தொடர்புடையவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தனது வாகனத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என இர்பான் வால்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments