Monday, September 28, 2026
spot_img
Homeபொது செய்திகள்45 மில்லியன் ஆண்டு பழமையான ‘இடி மிருகம்’!

45 மில்லியன் ஆண்டு பழமையான ‘இடி மிருகம்’!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், ஓஷன்சைட் பகுதியில் கட்டுமானப் பணியின்போது சுமார் 40 முதல் 45 மில்லியன் ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய பாலூட்டி ஒன்றின் புதைபடிவ எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நகரின் உட்கட்டமைப்பு திட்டத்துக்காக சுமார் 12 அடி ஆழத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின்போது இந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதில் காலெலும்புகள், விலா எலும்புகள் உள்ளிட்ட பல எலும்புத் துண்டுகள் அடங்குகின்றன.

பழங்காலவியல் நிபுணர்களின் ஆரம்ப ஆய்வுகளின்படி, இந்த எச்சங்கள் ‘இடி மிருகம்’ (Thunder Beast) என அழைக்கப்படும் பிரொண்டோதெரி (Brontothere) இனத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கொம்பற்ற காண்டாமிருகத்தை ஒத்த ‘சதுப்பு நிலக் காண்டாமிருகம்’ (Swamp Rhino) இனத்தைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் பாதுகாப்பாகப் பிளாஸ்டர் உறைக்குள் வைக்கப்பட்டு ஆய்வகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அங்கு மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே அவை எந்த விலங்கினத்தைச் சேர்ந்தவை என்பது உறுதியாகத் தெரியவரும்.

பின்னர் இந்த புதைபடிவங்கள் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட உள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments