Saturday, October 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்436 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நாளை நியமனக் கடிதங்கள் வழங்கல்

436 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நாளை நியமனக் கடிதங்கள் வழங்கல்

கனிஷ்ட சேவைத் தரத்தில் 436 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை சுகாதார மற்றும் ஊடக அமைச்சு மேற்கொண்டுள்ளது.

நாட்டின் இலவச சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்துவதுடன், மக்களுக்கு உயர்தரமான, வினைத்திறனான மற்றும் தொடர்ச்சியான சுகாதார சேவைகளை வழங்குவதை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் ஆளணி வள அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இதற்கமைய, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில், அமைச்சின் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் நாளை (11) மருதானை டவர் மண்டபத்தில் நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதன்போது 436 சுகாதார சேவை உதவியாளர்களுக்கும் நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments