Sunday, November 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்18 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு!

18 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு!

2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, 18 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு பங்குச் சந்தையின் சந்தைப்படுத்தல் பிரிவின் சிரேஷ்ட உப தலைவர் நிரோஷன் விஜயசுந்தர தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், பங்குச் சந்தை குறித்த அடிப்படை அறிவை மாணவர்களுக்கு வளர்ப்பதும், எதிர்காலத்தில் அவர்கள் வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறுவதற்குத் தேவையான நிதி அறிவை அவர்களுக்கு வழங்குவதுமே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கங்கள் என்று குறிப்பிட்டார்.

இதன்படி, 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட, 13ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.

விண்ணப்பதாரர்கள், கொழும்பு பங்குச் சந்தையினால் அறிமுகப்படுத்தப்படும் பாடநெறியைப் பூர்த்தி செய்து, அதன் பின்னர் நடத்தப்படும் பரீட்சையில் தேர்ச்சி பெற வேண்டும். இவ்வாறு வெற்றிகரமாக முடிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும், 10,000 ரூபாய் மதிப்பிலான முதலீட்டு வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்தத் திட்டத்திற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட விஜயசுந்தர, இது நகர்ப்புறப் பாடசாலைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் பயிலும் மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், பங்குச் சந்தை குறித்த நடைமுறை அறிவை மாணவர்களுக்கு வழங்குவதும், இதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் செல்வம் ஈட்டுவதற்கும், பிற்காலத்தில் தொழில்முனைவோராக மாறும்போது கொழும்பு பங்குச் சந்தை ஊடாக மூலதனத்தைத் திரட்டுவதற்கும் அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதுமே இந்தத் திட்டத்தின் மற்றுமொரு நோக்கம் என்று அவர் விளக்கினார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments