Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்எல்லயில் இடம்பெற்ற கோர விபத்தில் 15 பேர் பலி!

எல்லயில் இடம்பெற்ற கோர விபத்தில் 15 பேர் பலி!

தங்காலை நகரசபை ஊழியர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்ற பேருந்து, எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் 24வது கி.மீ. தூணுக்கு அருகில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இலங்கை வரலாற்றில் பதிவான மிக மோசமான விபத்தாக நேற்று இரவு எல்ல பகுதியில் பதிவாகியுள்ளது.

எல்லா வெல்லவாய சாலையில் மகாவங்குவ மவுண்ட் ஹேவன் மண்டபத்திற்கு அருகில் நடந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

குழந்தைகள் உட்பட 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

2025.09.04 நேற்று இரவு 9.00 மணியளவில், வெல்லவாய நோக்கிச் சென்ற பேருந்து, சாலையில் பயணித்த ஜீப் மீது மோதி, சாலையின் அருகே அமைக்கப்பட்டிருந்த உலோக வேலியில் மோதி 1000 அடி பள்ளத்தில் விழுந்து பாரிய விபத்தை சந்தித்துள்ளது

விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்தவர்களை மீட்க காவல்துறை அதிகாரிகள், சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் இணைந்து பணியாற்றினர். காயமடைந்த 18 பேர் பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவில் சுற்றுலா சென்று திரும்பிய 08 ஆண்கள், 05 பெண்கள், 3 சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் அடங்குவர்.

விபத்தில் இறந்த 09 பெண்கள் மற்றும் 06 ஆண்களின் உடல்கள் தியத்தலாவ, பண்டாரவளை மற்றும் பதுளை மருத்துவமனைகளில் உள்ள பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வாகன விபத்தில் தொடர்புடைய ஜீப் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பயணிகளை மீட்க உதவிய இரண்டு நபர்களும் காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments