Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வீட்டிலிருந்து வெளியே சென்றவர் சடலமாக மீட்பு!

வீட்டிலிருந்து வெளியே சென்றவர் சடலமாக மீட்பு!

கேகாலை – தெரணியகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொல்வத்ததென்ன பிரதேசத்தில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரணியகல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (13) மாலை இடம்பெற்றுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் தெரணியகல , உடஹேன்கந்த பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார்.

இவர் கடந்த திங்கட்கிழமை (12) காலை வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதனால் இவரது குடும்பத்தினர் இவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது பொல்வத்ததென்ன பிரதேசத்தில் வைத்து இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் குடும்பத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெரணியகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments