Thursday, October 1, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்‘விஜய்காந்த் குறித்து பேசும் அருகதை ஆதவ் அர்ஜூனாவிற்கு கிடையாது’

‘விஜய்காந்த் குறித்து பேசும் அருகதை ஆதவ் அர்ஜூனாவிற்கு கிடையாது’

கோயம்புத்தூரில் தேதிமுக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.,

“மதுராந்தகத்தைத் தொடர்ந்து தாராபுரத்தில் இன்று பிரசாரம் செய்கிறோம். தாராபுரத்தில் திமுக மிகப்பெரிய வெற்றிப் பெறும். ஸ்டாலின் கேட்டுக் கொண்டதின் பேரில், கூட்டணி தர்மத்திற்காக பிரசாரம் செய்ய வந்துள்ளேன்.” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்.,

“யாராக இருந்தாலும் பெண்களை குறித்து தவறாக பேசுபவர்களை எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாது. முதலில் ஆதவ் விஜயகாந்தை பார்த்துள்ளாரா? சினிமாவில் திரையில் பார்த்திருப்பார். என்னைச் சுற்றி இருக்கும் என் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களுமே விஜயகாந்தின் ஆன்மா.

விஜயகாந்தின் குடும்பத்திற்கும், கட்சிக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் அவரின் ஆன்மா குறித்து பேசக்கூடாது. அவர் குறித்து பேசும் அருகதை யாருக்கும் கிடையாது.

வாய்க்கு வந்ததை பேசக்கூடாது. இதுதொடர்பாக பேசுவதை இதோடு ஆதவ் அர்ஜூனா நிறுத்திக்கொள்ள வேண்டும்.

ஈவிஎம் இயந்திரங்களில் நிறைய குளறுபடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர். நடைமுறையால் ஆட்சிகள் மாறியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

எனவே பழைய வாக்குச்சீட்டு முறை வரவேண்டும் என்பதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு. ஈவிஎம் இயந்திரங்களில் நிறைய தவறுகள் நடக்கின்றன என்பது உண்மை. பழைய தேர்தல் முறைதான் வரவேற்கத்தக்கது.

விலைவாசி உயர்வு, பேருந்து கட்டண உயர்வை அரசு திரும்பப் பெறவேண்டும். கொடுத்த வாக்குறுதிகளை விஜய் நிறைவேற்றவில்லை என்பதை மக்களே கூறிவருகின்றனர். ” என தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments