Monday, June 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வருகிற செவ்வாய் நல்லூர் ஆலயத்தில் கொடியேற்றம் - ஏற்பாடுகள் மும்முரம்

வருகிற செவ்வாய் நல்லூர் ஆலயத்தில் கொடியேற்றம் – ஏற்பாடுகள் மும்முரம்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (29) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

அதனை முன்னிட்டு ஆலய வெளிவீதியினை சுற்றி சிவப்பு வெள்ளைத் துணிகள் கட்டப்பட்டு, திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.

மகோற்சவ திருவிழாக்களின் 10ஆம் திருவிழாவான மஞ்ச திருவிழா எதிர்வரும் 7ஆம் திகதியும், 22ஆம் திருவிழாவான மாம்பழ திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 19ஆம் திகதியும், 24ஆம் திருவிழாவான தேர் திருவிழா ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி காலையும், மறுநாள் 22ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்று, மாலை கொடியிறக்கம் நிகழ்த்தப்படுவதோடு, மகோற்சவம் நிறைவு பெறும்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments