Sunday, October 11, 2026
spot_img
Homeபொது செய்திகள்வட்ஸ்அப்பில் புதிய வசதி - ஒன்லைனில் இருப்பவர்களை எளிதில் அறியலாம்!

வட்ஸ்அப்பில் புதிய வசதி – ஒன்லைனில் இருப்பவர்களை எளிதில் அறியலாம்!

வட்ஸ்அப் செயலியில் பயனர்களின் வசதிக்காக, தொடர்புகளை ஒரே இடத்தில் பார்க்கக்கூடிய புதிய Contacts Tab வசதியை ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக மெட்டா நிறுவனம் சோதித்து வருகின்றது.

இந்தப் புதிய வசதியின் மூலம், வட்ஸ்அப்பில் உள்ள தொடர்புகளை ஒரே இடத்தில் பார்ப்பதுடன், தற்போது ஆன்லைனில் இருக்கும் நபர்களை எளிதாக அடையாளம் காணவும் முடியும். ஒன்லைனில் இருக்கும் நபர்களின் புரொபைல் படத்திற்கு அருகில் பச்சை நிறப் புள்ளி காண்பிக்கப்படும்.

மேலும், பெயர், தொலைபேசி எண் அல்லது பயனர்பெயர் மூலம் தொடர்புகளைத் தேடும் வசதியும் இதில் இடம்பெறவுள்ளது. ஒன்லைனில் இருப்பவர்களை முதலில் காண்பிக்கவும், பெயர் வரிசைப்படி தொடர்புகளை ஒழுங்குபடுத்தவும் முடியும்.

அத்துடன், தொலைபேசியில் சேமிக்கப்பட்டுள்ள தொடர்புகளின் பிறந்தநாள் விவரங்களின் அடிப்படையில், குறிப்பிட்ட நபரின் பிறந்தநாளன்று கேக் எமோஜியுடன் அறிவிப்பைக் காண்பிக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பிறந்தநாளை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள முடியும்.

இந்த வசதி தற்போது உருவாக்கப்பட்டு வரும் நிலையில், ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி எப்போது கிடைக்கும் என்பது தொடர்பில் அறிவிப்பு வெளியாகவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments