Tuesday, November 17, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்

வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புயலாக மாறுவதற்கான வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள இந்தத் தொகுதி, இன்று 16ஆம் திகதி மாலை புயலாகவும், நவம்பர் 17ஆம் திகதியளவில் தீவிரப் புயலாகவும் வலுப்பெறக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கடல் நடவடிக்கைகளுக்குத் தடை

இதன் காரணமாக, பின்வரும் கடற்பகுதிகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில், அம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகள்.

* வடக்கு அட்சரேகை 05° – 15° மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 80° – 90° இடைப்பட்ட ஆழ்கடல் பகுதிகள்.

குறித்த கடற்பகுதிகளில் ஏற்கனவே பயணிக்கும் மீன்பிடி மற்றும் கடற்படையினர் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புயலின் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி

* நவம்பர் 16 மாலை – புயலாக வலுப்பெறலாம்.

* நவம்பர் 17 இரவு – தீவிரப் புயலாக மாறலாம்.

* நவம்பர் 19 காலை – மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்பு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அடுத்தடுத்த வானிலை அறிவிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கைகளை அவதானிக்குமாறு கடற்றொழிலாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments