Tuesday, November 17, 2026
spot_img
Homeஉலக செய்திகள்எண்ணெய் விலைகள் சரிவு!

எண்ணெய் விலைகள் சரிவு!

கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்கள் இருந்தபோதிலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக மத்திய கிழக்கிலிருந்து வரும் ஏற்றுமதிகள் போருக்கு முந்தைய நிலைக்கு கிட்டத்தட்ட மீண்டு வந்துள்ளதால், விநியோக உபரி ஏற்படும் என்ற எதிர்பார்ப்புகளின் காரணமாக எண்ணெய் விலைகள் சரிந்துள்ளன.

கூடுதலாக, ஒக்டோபர் மாதத்தில் சீன சுத்திகரிப்பு ஆலைகளின் உற்பத்தி குறைந்தது, இது மசகு எண்ணெய்க்கான தேவை குறைந்துள்ளதைக் குறிக்கிறது.

பிரென்ட் எதிர்கால ஒப்பந்தங்கள் 04:27 GMT நிலவரப்படி, ஒரு பீப்பாய்க்கு 54 சென்ட்கள் அல்லது 0.6 சதவீதம் குறைந்து $95.30 ஆக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் உலக எண்ணெய் சந்தை உபரி நிலைக்குத் திரும்பும் என்று சர்வதேச எரிசக்தி முகமை கூறியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments