Monday, June 8, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்ரன்பிர் கபூர் – சாய் பல்லவி நடிக்கும் ராமாயணா படத்தின் காணொளி வெளியீடு

ரன்பிர் கபூர் – சாய் பல்லவி நடிக்கும் ராமாயணா படத்தின் காணொளி வெளியீடு

இந்திய சினிமாவில் வருடம் வருடம் ராமாயணம் கதையை மையமாக வைத்து திரைப்படங்கள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. அந்த வரிசையில் அடுத்ததாக நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணா திரைப்படம் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகி வருகிறது. இப்படத்தில் ராம் கதாப்பாத்திரத்தில் ரன்பிர் கபூர், சீதா கதாப்பாத்திரத்தில் சாய் பல்லவி மற்றும் ராவணன் கதாப்பாத்திரத்தில் யாஷ் நடிக்கின்றனர். படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. முதல் பாகம் 2026 ஆம் ஆண்டு தீபாவளிக்கும் அதற்கு அடுத்த பாகம் 2027 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. திரைப்படம் ஐமேக்ஸ் திரையில் வெளியிட இருக்கின்றனர். படத்தின் விஎப் எக்ஸ் காட்சிகளை 8 முறை ஆஸ்கர் விருது வென்ற டிஎன்இஜி நிறுவனம் மேற்கொள்கிறது. இசையை ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் மேற்கொள்கின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments