Monday, November 23, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யாழ். நெல்லியடியில் மாவீரர் கொடிகளை அகற்றுமாறு காவல்துறையினர் அழுத்தம்

யாழ். நெல்லியடியில் மாவீரர் கொடிகளை அகற்றுமாறு காவல்துறையினர் அழுத்தம்

மாவீரர் வாரத்தை முன்னிட்டு நெல்லியடி நகரில் கட்டப்பட்டுள்ள சிவப்பு, மஞ்சள் நிறக் கொடிகளை அகற்றுமாறு நெல்லியடி காவல்துறையினர் அழுத்தம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே, நெல்லியடி நகரில் மாவீரர் நினைவேந்தலுக்கான பந்தல் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது காவல்துறையினர் பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது நினைவேந்தலை முன்னிட்டு நகரில் கட்டப்பட்டுள்ள கொடிகளையும் அகற்றுமாறு காவல்துறையினர் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

அடையாள அட்டை இலக்கங்கள்

மேலும், நினைவேந்தல் ஏற்பாட்டாளர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கங்களையும் காவல்துறையினர் பெற்றுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறையினரின் இத்தகைய நடவடிக்கைகள் ஏற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments