Wednesday, September 23, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்மண்டாடி’ படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன்

மண்டாடி’ படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன்

மதிமாறன் புகழேந்தி எழுத்து மற்றும் இயக்கத்தில் கடல்சார் மக்களின் வாழ்க்கை முறையையும், படகுப் போட்டியையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘மண்டாடி’.

சூரி, சுஹாஸ், சத்யராஜ், மகிமா நம்பியார், ரவீந்திர விஜய், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான ‘மண்டாடி’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக நடிகர் கமல்ஹாசன், ‘மண்டாடி’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். படத்தின் வெற்றி மற்றும் படக்குழுவினரின் பணியை அவர் பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments