Tuesday, July 7, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்போர்த்துக்கலை அதிரடியாக வீழ்த்தி ஸ்பெயின் காலிறுதிக்கு தகுதி!

போர்த்துக்கலை அதிரடியாக வீழ்த்தி ஸ்பெயின் காலிறுதிக்கு தகுதி!

பிபா உலகக் கிண்ணம் 2026 தொடரின் 16 அணிகளின் சுற்றில், போர்த்துக்கல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி காலிறுதிப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த முக்கியமான ஆட்டத்தில், ஆரம்பம் முதலே இரு அணிகளும் சமபலத்துடன் மோதின. ஆட்டத்தின் 90 நிமிடங்கள் வரை இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

போட்டி சமனில் முடிந்து கூடுதல் நேரத்திற்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (90 + 1′) ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரர் மைக்கேல் மெரினோ (Mikel Merino) ஒரு கோலை அடித்து ஒட்டுமொத்த மைதானத்தையும் அதிரவைத்தார்.

இந்த ஒரு கோலின் மூலம் ஸ்பெயின் அணி 1-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு நுழைந்தது.

அதேவேளை, இந்த அதிர்ச்சித் தோல்வியின் மூலம் போர்த்துக்கல் அணி உலகக் கிண்ண தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கடைசி உலகக் கிண்ண போட்டியாக இது இருக்கக்கூடும் என்பதால் அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments