பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ண நடவடிக்கை எடுத்துள்ளார்.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எழுந்து நின்று, சபாநாயகரிடம் அவசர விவாதம் ஒன்றைக் கோரினர்.
அதற்கமைய, சபாநாயகர் இது குறித்து ஆளுந்தரப்பிடம் வினவியபோது, அதற்கு இணங்க முடியாது எனவும், தேவையெனில் குறித்த விடயம் தொடர்பாக வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு இணங்குவதாகவும் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நீதித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண பாராளுமன்றம் தலையீடு செய்யும் வகையில் அவசர விவாதத்தை நடத்த ஆளும் தரப்பு மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதனால் சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.


