Monday, June 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பண்டாரவளையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது!

பண்டாரவளையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது!

சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (14) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் பதுளை – பண்டாரவளை, ஹப்புத்தளை வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஹல்தும்முல்ல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 320 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments