நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் ஹெலிகாப்டர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
எனினும், நீர்மட்டம் அதிகமாக இருப்பதால் சில பகுதிகளில் ஹெலிகாப்டர்களை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீதிகள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன.


