Monday, June 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நீர்கொழும்பில் 1,881 கிலோ பீடி இலைகளுடன் ஒருவர் கைது!

நீர்கொழும்பில் 1,881 கிலோ பீடி இலைகளுடன் ஒருவர் கைது!

சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (01) காலை நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் நீர்கொழும்பு – தெவனகுரண பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடான முறையில் பயணித்த லொறியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு – பிட்டிபன பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 1,881 கிலோ 100 கிராம் பீடி இலைகள் நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments