Monday, June 22, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்நியூசிலாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி எகிப்து வெற்றி

நியூசிலாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி எகிப்து வெற்றி

2026 கால்பந்து தொடரின் குழு G பிரிவில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி எகிப்து அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் 15 ஆவது நிமிடத்தில் ஃபின் சர்மன் முதல் கோலை அடிக்க நியூசிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 58 ஆவது நிமிடத்தில் எகிப்து அணி யின் மொஸ்டாபா ஜிகோ ஒரு ஹெடர் மூலம் கோல் அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார்.

தொடர்ந்து 67 ஆவது நிமிடத்தில் எகிப்தின் மொஹமட் சாலா ஒரு கோலை அடித்து 2-1 என அணியை முன்னிலைக்கு கொண்டுசென்றார்.

அதைத்தொடர்ந்து 82 ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக களம் புகுந்த ட்ரெசெகுவே எகிப்தின் 3 ஆவது கோலை பதிவு செய்து வெற்றியை உறுதி செய்தார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments