வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் நாளை (19) வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, நாளை பகல் வேளையில் குறித்த பகுதிகளில் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை ஆகியவற்றின் அடிப்படையில், மனித உடல் உணரும் வெப்பத்தின் அளவு கணிக்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும், திறந்தவெளியில் உடல் உழைப்பில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தக்கூடும். தொடர்ந்து கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுவது வெப்பத்தினால் ஏற்படும் தசைப்பிடிப்புகளுக்கும் வழிவகுக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதுடன், வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


