Sunday, October 18, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இலங்கைக்கு 306 வெற்றியிலக்கு

இலங்கைக்கு 306 வெற்றியிலக்கு

பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று (18) மோதி வருகின்றன.

போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், இலங்கை அணியை குசல் மெண்டிஸும், பாகிஸ்தான் அணியை  ஷஹீன் அப்ரிடியும் வழிநடத்துகின்றனர்.

இலங்கை அணி தனது பந்துவீச்சுப் பலத்தை அதிகரிக்கும் வகையில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு வேகப்பந்து வீச்சு சகலதுறை ஆட்டக்காரர் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்கியது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சல்மான் ஆஹா 107 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.

இந்நிலையில் 306 வெற்றியிலக்கை நோக்கி இலங்கை அணி துடுப்பாடவுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments