Sunday, October 18, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவின் டெல்டா நகரில் ஆட்சி மாற்றம்

கனடாவின் டெல்டா நகரில் ஆட்சி மாற்றம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள டெல்டா நகரில், கடந்த நான்கு ஆண்டுகளாக நகரசபையில் நிலவி வந்த முரண்பாடுகளுக்கு மத்தியில் புதிய மேயராக மெலிசா கிரானம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

டெல்டா நகரின் தற்போதைய மேயர் ஜோர்ஜ் ஹார்வியைத் தோற்கடித்த மெலிசா கிரானம், முன்னாள் நகரசபை உறுப்பினர் டிலான் க்ரூகரையும் பின்னுக்குத் தள்ளி வெற்றிபெற்றுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக நகரசபையில் ஜோர்ஜ் ஹார்விக்கும் டிலான் க்ரூகருக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் நிலவி வந்தன.

மெட்ரோ வான்கூவர் பிராந்திய மாவட்டத்தின் தலைமைப் பதவியிலிருந்து ஹார்வியை நீக்குவதற்கும், மேயராக அவருக்கு இருந்த சில அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் க்ரூகர் வாக்களித்திருந்தார்.

இந்நிலையில், இருவரில் ஒருவரைத் தெரிவு செய்வதற்குப் பதிலாக, வாக்காளர்கள் மெலிசா கிரானத்தைப் புதிய மேயராகத் தெரிவு செய்துள்ளனர்.

டெல்டா பொலிஸ் திணைக்களத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட கிரானம், நகரசபையின் நிர்வாக அணுகுமுறையில் முழுமையான மாற்றம் தேவை எனத் தனது தேர்தல் பிரசாரத்தில் வலியுறுத்தியிருந்தார்.

இந்தத் தேர்தல் முடிவு, டெல்டா நகரின் நிர்வாகத்தில் புதிய தலைமைத்துவத்திற்கான மக்களின் ஆதரவை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments