தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, இந்த ஆண்டு ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து திரைப்படப் பணிகளில் இருந்து சிறிது காலம் ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில், சமந்தாவிற்கு எட்டு மாதங்களிலேயே குறைப்பிரசவம் நடந்து, ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளதாக, குழந்தைகள் தொடர்பான செய்திகளை அவர்கள் மறைப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
மாறாக, சமந்தா அண்மையில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் காணொளியையும், தனது கணவருடன் பிக்கிள்பால் விளையாடும் காணொளியையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.
அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சமந்தாவின் பிரசவம் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


