Saturday, September 19, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்துருவ் விக்ரமின் ‘ஜாக்கி’ புரோமோ வெளியானது

துருவ் விக்ரமின் ‘ஜாக்கி’ புரோமோ வெளியானது

நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய காதல் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் எழுதி இயக்கவுள்ளார்.

‘பிரம்மன்’, ‘ஆதித்யா வர்மா’ உள்ளிட்ட திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய கரண் அரவிந்த் குமார், தற்போது இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் எர்னேனி மற்றும் ரவி சங்கர் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

மேலும், நடிகர்கள் பிருத்வி பாண்டியராஜ், சாய் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜாக்கி’ என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் கடந்த செப்டம்பர் 12ஆம் திகதி வெளியிடப்பட்டது. துருவ் விக்ரமின் நான்காவது திரைப்படமாக உருவாகும் ‘ஜாக்கி’, காதல் மற்றும் அதிரடி அம்சங்களுடன் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘ஜாக்கி’ திரைப்படத்தின் புதிய புரோமோ காணொளி வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments