Friday, November 6, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்தீபாவளியை முன்னிட்டு டெல்லி மெட்ரோ சேவைகளில் நேர மாற்றம்!

தீபாவளியை முன்னிட்டு டெல்லி மெட்ரோ சேவைகளில் நேர மாற்றம்!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி மெட்ரோ ரயில் சேவைகளின் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) அறிவித்துள்ளது.

இதன்படி, மூன்று மெட்ரோ வழித்தடங்களில் வழக்கத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாக ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதன்படி, பிங்க் லைன், மெஜந்தா லைன் மற்றும் கிரே லைன் ஆகிய வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகும் ரயில் சேவைகள், தீபாவளியன்று காலை 6.00 மணிக்கே ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைன் உட்பட அனைத்து மெட்ரோ வழித்தடங்களிலும் கடைசி ரயில் புறப்படும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.

இதன்படி, வழக்கமாக இரவு 11.00 மணிக்குப் புறப்படும் கடைசி ரயில், தீபாவளியன்று இரவு 10.00 மணிக்கே அனைத்து முனைய நிலையங்களிலிருந்தும் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை மாற்றியமைக்கப்பட்ட நேர அட்டவணைக்கு ஏற்ப திட்டமிட்டுக்கொள்ளுமாறு டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments