நாட்டில் இன்று பாரிய குழப்பத்தையும் பேசு பொருளாக்கப்பட்டுள்ள புதிய பங்கரவாதச் சட்டம் தொடர்பில் தனக்கு இப்போது கருத்துக் கூற முடியாது என கொழும்பு மறைமாவட்ட ஆயர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்த கருத்து
தற்போது அமுலிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படும் புதிய அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் கத்தோலிக்க திருச்சபையின் சட்டத்தரணிகள் குழு ஆராய்ந்து வருவதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டத்தரணிகள் குழுவின் முழுமையான விசாரணைகளும் ஆய்வுகளும் நிறைவடையும் வரை அந்தச் சட்டமூலம் குறித்து பகிரங்கமாக எந்தவொரு அறிக்கையையும் அல்லது நிலைப்பாட்டையும் வெளியிட உத்தேசமில்லை என குறிப்பிட்டுள்ளார்.


