கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து தியத்தலாவை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (27) அதிகாலை ஒரு மணியளவில் தியத்தலாவ ரயில் நிலையத்திற்கு அருகே, வீதியை விட்டு விலகிச் சென்ற பேருந்து சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் சுமார் 42 பேர் காயமடைந்த நிலையில் தியத்தலாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


