Friday, July 31, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தலைக்கவச விற்பனையாளர்களுக்கு விசேட அறிவித்தல்

தலைக்கவச விற்பனையாளர்களுக்கு விசேட அறிவித்தல்

தலைக்கவச விற்பனையாளர்களுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.

அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உங்கள் விற்பனை நிலையத்தில் உள்ள தலைக்கவச இருப்புகளை இன்றே பரிசோதியுங்கள்.

SLS தரச் சான்றிதழ் குறியீடு இல்லாத மோட்டார் சைக்கிள் பாதுகாப்புத் தலைக்கவசங்களை களஞ்சியப்படுத்துதல், காட்சிப்படுத்துதல், விநியோகித்தல் அல்லது விற்பனை செய்தல் சட்டவிரோதமாகும்.

2015.07.16 ஆம் திகதிய 1923/65 இலக்க அதிவிசேட வர்த்தமானியின் 59 ஆம் பணிப்புரைக்கு அமைவாக, SLS 517 தரநிலைக்குரிய SLS தரச் சான்றிதழ் குறியீடு இல்லாத உள்நாட்டு அல்லது இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் பாதுகாப்புத் தலைக்கவசங்களை இலங்கை சந்தையில் விற்பனை செய்ய முடியாது.

✅ நீங்கள் இன்றே செய்ய வேண்டியவை

✔️ ஒவ்வொரு தலைக்கவசத்திலும் SLS தரச் சான்றிதழ் குறியீடு உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.

✔️ விநியோகஸ்தரின் பற்றுச்சீட்டுகள் மற்றும் இறக்குமதியாளரின் விபரங்களைச் சரிபார்க்கவும்.

✔️ SLS குறியீடு இல்லாத இருப்புகளை உடனடியாக விற்பனையிலிருந்து அகற்றவும்.

✔️ சந்தேகத்திற்கிடமான அல்லது எளிதில் நீக்கக்கூடிய SLS ஒட்டுப்பலகையுள்ள தலைக்கவசங்களை விற்பனை செய்ய வேண்டாம்.

✔️ ஒவ்வொரு விற்பனைக்கும் முறையான பற்றுச்சீட்டினை வழங்கவும்.

❌ இவை எந்தவொரு காரணமாகவும் ஏற்கப்படமாட்டாது

✖️ “இது Original Imported.”

✖️ “DOT / ECE / ISI உள்ளது.”

✖️ “இது Racing Helmet.”

✖️ “விநியோகஸ்தர் விற்கலாம் என்றார்.”

✖️ “நாங்கள் உற்பத்தியாளர்கள் அல்ல.”

வர்த்தகப் பெயர் பிரபலமானதாக இருந்தாலும், வெளிநாட்டு தரச் சான்றிதழ் இருந்தாலும், இலங்கையில் விற்பனை செய்வதற்கு SLS தரச் சான்றிதழ் குறியீடு கட்டாயமாகும்.

SLS குறியீடு இல்லாத தலைக்கவசங்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட இருப்புகளுக்கு எதிராக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்.

சட்டத்தை அறியாதது ஒரு காரணமாக ஏற்கப்படாது.

இன்றே உங்கள் இருப்புகளைப் பரிசோதியுங்கள்.

சட்டத்திற்கிணங்கிய தலைக்கவசங்களை மட்டுமே விற்பனை செய்யுங்கள்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments