அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (10) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 324 ரூபாய் 66 சதமாகவும் (ரூ. 324.6604), விற்பனை விலை 335 ரூபாய் 39 சதமாக (ரூ. 335.3970) பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் (09) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 332.38 ரூபாவாகவும், விற்பனை விலை 342.08 ரூபாவாகவும் பதிவாகி இருந்தது.
இந்த நிலையில், இன்று ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது.


