உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே, நீர்கொழும்பு பகுதிக்கு 5 பேரை அனுப்பி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் விசேட பூஜைக்கு கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை திரட்டியுள்ளார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (10) பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தற்கொலை குண்டுத்தாரிகளுடன், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குண்டுத்தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை வழங்கியுள்ளார் என்றும் இந்த விடயங்கள் அனைத்தும் தீவிரமான விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு ஆனந்த விஜேபால பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.


