Thursday, November 19, 2026
spot_img
Homeகனடா செய்திகள்டொராண்டோவில் வேமோ தானியங்கி டாக்ஸி சேவைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

டொராண்டோவில் வேமோ தானியங்கி டாக்ஸி சேவைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

டொராண்டோ நகரில் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள வேமோ (Waymo) ஓட்டுநர் இல்லாத டாக்ஸி சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் போதிய ஆதரவு இல்லை எனப் புதிய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 62 சதவீதம் பேர் வேமோ சேவையைப் பயன்படுத்த வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளனர். மேலும், 36 சதவீதம் பேர் மட்டுமே இந்தச் சேவைக்கு அனுமதி வழங்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, கனடாவின் குளிர்காலத்தில் வாகனங்களின் செயல்பாடு, பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுநர்களின் பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல் மற்றும் டாக்ஸி, ஊபர் சாரதிகளின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவது குறித்து மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

2028ஆம் ஆண்டில் முழுமையான சேவையைத் தொடங்குவதற்கு முன்னதாக, டொராண்டோ வீதிகளில் தனது தானியங்கி வாகனங்களைச் சோதனை செய்ய வேமோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

எனினும், இந்தத் திட்டத்திற்கு அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆதரவைப் பெறுவது நிறுவனத்திற்குச் சவாலாக அமையும் எனக் கருதப்படுகிறது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments