Saturday, June 13, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்சென்னையில் பாரிய தீ விபத்து! 100 இற்கும் மேற்பட்ட கார்கள் சேதம்

சென்னையில் பாரிய தீ விபத்து! 100 இற்கும் மேற்பட்ட கார்கள் சேதம்

சென்னையின் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ அருகிலிருந்த வாகன நிறுத்தும் பகுதிக்கு பரவியதில், 100-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சேதமடைந்துள்ளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டவை என்றும், மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ காரணமாக வான்பரப்பில் கரும்புகை எழுந்ததால், மேடவாக்கம்–வேளச்சேரி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரி பகுதிகளில் பொதுமக்கள் கரும்புகையால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தீயை கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினர் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments