Tuesday, July 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சுரேஷ் சலேயின் மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

சுரேஷ் சலேயின் மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளமையை சவாலுக்குட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேலதிக பரிசீலனைக்காக இந்த மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, சுரேஷ் சலேவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று (14) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரரான சுரேஷ் சலே சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன மேலதிக சமர்ப்பிப்புகளை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்தே, மனு மீதான மேலதிக பரிசீலனையை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments