தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சிறுபான்மைக் கட்சிகள், தமது உரிமைகளுக்காகத் தனியானதொரு புதிய கூட்டணியை உருவாக்குவதில் எமக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் தங்களின் உரிமைகளுக்காகவும் கோரிக்கைகளுக்காகவும் தனியாக ஒழுங்கமைவதில் தவறில்லை.
அவர்கள் அனைவரும் தொடர்ந்தும் எமது ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்துதான் பயணிக்கின்றனர். தற்போதைய மக்கள் விரோத அரசை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்குக்காக, எதிர்காலத் தேர்தல்களில் அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து செயற்படும் என்பதில் எமக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றார்.


