சுமார் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான 237 கிராம் போதைப்பொருளுடன், வெளிநாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அங்கோலா நாட்டைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


