பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீதனை உடனடியாக விடுவிக்கக் கோரி வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் நேற்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா கலைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் அரசியல் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, கருத்துச் சுதந்திரத்தையும் கலைஞர்களின் உரிமைகளையும் மதிக்க வேண்டும் என வலியுறுத்திய போராட்டக்காரர்கள், சங்கீதனை நிபந்தனையின்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.





