Monday, June 15, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்23 ஆண்டுகளின் பின் தொடரை வென்ற இலங்கை அணி

23 ஆண்டுகளின் பின் தொடரை வென்ற இலங்கை அணி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.

மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியும் மழையினால் கைவிடப்பட்டுள்ளது.

ஜமைக்காவின் சபீனா பார்க் மைதானத்தில் நடைபெறவிருந்த இறுதிப் போட்டி, மழையின் குறுக்கீடு காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர்.

முன்னதாக நடைபெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்ததுடன், இரண்டாவது போட்டி மழையினால் கைவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மூன்றாவது போட்டியும் கைவிடப்பட்டதன்மூலம் ஒருநாள் தொடரை இலங்கை அண கைப்பற்றியது.

இலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் காரி கிர்ஸ்டன் (Gary Kirsten) மற்றும் தலைவர் குசல் மெண்டிஸ் கூட்டணியின் கீழ் இலங்கை அணி பெற்றுக்கொண்ட முதலாவது தொடர் வெற்றியாகும்.

23 வருடங்களின் பின்னர் இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகள் மண்ணில் தொடரொன்றை வென்றுள்ள சந்தர்ப்பம் இதுவாகும்.

2003 ஆம் ஆண்டு இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளில் தொடரை வென்றிருந்தது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments