Wednesday, November 25, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கோட்டாபய ராஜபக்சவின் மேன்முறையீட்டு மனு மார்ச் 5ஆம் திகதி விசாரணைக்கு!

கோட்டாபய ராஜபக்சவின் மேன்முறையீட்டு மனு மார்ச் 5ஆம் திகதி விசாரணைக்கு!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் மார்ச் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனுவை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராகவே கோட்டாபய ராஜபக்ச இந்த மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு இன்று (25) மஹிந்த சமயவர்தன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், குறித்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் மார்ச் 5ஆம் திகதி மேலதிக விசாரணை மற்றும் சமர்ப்பிப்புகளுக்காக அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments